• Fri. Mar 27th, 2026

24×7 Live News

Apdin News

‘இறந்தவர்களுக்காக பெங்களூரு மைதானத்தில் 11 காலி இருக்கைகள்’ – ஆர்சிபி கூறியது என்ன?

Byadmin

Mar 27, 2026


உயிரிழந்த ரசிகர்கள் நினைவாக சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளின்போது 11 காலி இருக்கைகள்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ‘ஹோம் ஸ்டேடியம்’ சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

2025 ஐபிஎல் கோப்பை வென்றதற்கான கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக அந்த மைதானத்தில் நடக்கும் ஆர்சிபி-யின் போட்டிகளில் 11 காலி இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு வரும் சனிக்கிழமைதான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இங்கு விளையாடுகிறது. சில வாரங்கள் முன்பு வரை இந்த மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

என்ன நடந்தது?

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே ஆர்சிபி அணியின் கோப்பை கனவு என்பது நிறைவேறாமல் இருந்துவந்தது.

சுமார் 18 ஆண்டுகளாக அந்த அணியின் ரசிகர்கள் கோப்பைக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது அந்த அணி.

By admin