• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

இறைச்சி வெந்துவிட்டதா என்று உறுதி செய்வது எப்படி? சமைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

Byadmin

Apr 6, 2026


இறைச்சி வெந்துவிட்டதா என்று உறுதி செய்வது எப்படி? சமைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமெனில், போதுமான ஊட்டச்சத்துள்ள பாதுகாப்பான உணவு போதுமான அளவில் நமக்குத் தேவைப்படுகிறது.

தூய்மையான, நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. ஊட்டச்சத்தும் உணவுப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்தது.

நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமெனில், போதிய ஊட்டச்சத்துள்ள பாதுகாப்பான உணவு போதுமான அளவில் நமக்குத் தேவைப்படுகிறது.

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயனங்களால் மாசுபட்ட உணவு, வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை 200-க்கும் மேற்பட்ட நோய்களை உண்டாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலகளவில் பத்தில் ஒருவர் மாசுபட்ட உணவினால் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார், இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 4,20,000 பேர் உயிரிழக்கின்றனர்.

உணவு மூலம் பரவும் நோய்களால் உற்பத்தித் திறனிலும் மருத்துவச் செலவுகளிலும் சுமார் 9 லட்சம் கோடி ரூபாயை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் இழக்கின்றன.

By admin