• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்? – Vanakkam London

Byadmin

Feb 22, 2025


எத்தனை காய்கள் இருந்தாலும், நாம் இறைவன் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் பொருள் தேங்காய்தான். நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக் கூடிய தேங்காய் என்று சொல்வார்கள்.

தேங்காயின் மீது கற்பூரம் வைத்து, அதை தொடர்புடையவர்கள் தலையைச் சுற்றி சிதறி உடைக்கும் காட்சியைக் கண்டிருப்பீர்கள். இதனால் துன்பங்கள் சிதறி ஓடும் என ஆன்மீக பெரியவர்கள் கூறுகின்றனர்.

தெய்வங்கள் திருவீதியில் சுற்றி, கோவிலுக்குள் செல்வதற்கு முன், அவர்கள் தேங்காயை எடுத்து சிலைகளுக்கு சுற்றி, வீதியில் உடைக்கின்றனர். மூன்று கண்கள் கொண்டதால் இதனை முக்கண்ணனின் லட்சணம் என சொல்லப்படுகின்றது.

இந்த சிதறுகாயை உடைத்தால், அனைத்து துன்பங்களும் நசுங்கி போகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

By admin