• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

‘இலங்கைத் தமிழர் என்றாலே ஈழத்தமிழர் மட்டும்தானா?’ – இந்திய திரைப்படங்களால் எழும் சர்ச்சைகள்

Byadmin

Aug 17, 2025


இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு
படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன.

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கிங்டம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.

‘கிங்டம்’ திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் ‘முருகன்’. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த ‘முருகன்’ கதாபாத்திரம் இருக்கும்.

இந்த பழங்குடி மக்கள் 1920இல் இந்தியாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) குடிபெயர்ந்து இலங்கை வந்தவர்கள் என்று காட்டப்படும். மிகவும் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் இந்த முருகனைக் கொன்று, தன் பழங்குடி மக்களை கதாநாயகன் எப்படி மீட்கிறான் என்பதே கிங்டம் படத்தின் கதை.

‘கிங்டம்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனம், “தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்” என்று அறிக்கை வெளியிட்டது.

By admin