0
சூறாவளி, மண்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கான நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.
இலங்கை மாத்திரம் அல்லாமல் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு, இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நாடுகளில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்நாடுகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.