இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 479 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 23 பேரும், சந்தேகத்தின் பேரில் 748 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 210 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 110 சாரதிகளும், கவனக் குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 25 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 202 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
The post இலங்கையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 479 பேர் கைது! appeared first on Vanakkam London.