• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையில் ‘கியூஆர்’ முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் – எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?

Byadmin

Mar 26, 2026


இலங்கை, கியூஆர் முறை, எரிபொருள் விநியோகம், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

‘எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்’ முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை இலங்கை அரசு தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீடு, எரிபொருள் பெறுவதற்கு செல்லுபடியாகும் (வாகனம் மற்றும் தொலைபேசி எண் மாறவில்லை என்றால்), மேலும் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கியூஆர் குறியீட்டை எவ்வாறு பெறுவது?

முந்தைய பதிவாளர்களின் வாகன உரிமை அல்லது தொலைபேசி எண் மாறவில்லை என்றால், https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தில் இருந்து கியூஆர் குறியீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒருவரிடம் ஏற்கெனவே பயன்படுத்திய கியூஆர் குறியீடு இருந்தால், அதை மீண்டும் பயன்படுத்தலாம். வாகன உரிமை அல்லது தொலைபேசி எண் மாறியிருந்தால், நீங்கள் https://fuelpass.gov.lk இல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் கியூஆர் குறியீட்டைப் பதிவு செய்யாத வாகனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

By admin