இலங்கையின் மலைப்பாங்கான ஒரு பகுதியில், பஸ் ஒன்று வீதியில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்புக்கு கிழக்கே சுமார் 280 கிலோமீட்டர் (174 மைல்கள்) தொலைவில் உள்ள வெல்லவாய நகருக்கு அருகில் வியாழக்கிழமை இரவு (செப். 4) இந்த விபத்து நிகழ்ந்தது.
எல்ல–வெல்லவாய பிரதான வீதியில், 23 மற்றும் 24 கிலோமீட்டர் தூரங்களுக்கு இடையில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
தங்கல்லையில் இருந்து வந்த சுமார் 30 மாநகர ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ், எல்லயில் சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில், ஒரு ஜீப் வண்டியுடன் மோதி, வீதியில் பாதுகாப்பு வேலியைத் தாண்டி, சுமார் 1,000 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சாரதி மற்றும் ஒன்பது பெண்கள் அடங்குவர்.
தற்போது 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் மீட்புப் பணிகளுக்கு உதவ விரைந்த இரண்டு நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
The post இலங்கையில் பஸ் விபத்து: 15 பேர் பலி, பலர் படுகாயம் appeared first on Vanakkam London.