‘டிட்வா’ புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையில் ஆங்காங்கே ஏற்பட்ட இயற்றை அசம்பாவித சம்பவங்களால் கடந்த 16ஆம் திகதி முதல் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 72 மணித்தியாலங்களில் மாத்திரம் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் 21 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!
மோசமான வானிலையால் 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் நான்கு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன. அதே நேரத்தில், பல மாவட்டங்களில் 666 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

The post இலங்கையில் மோசமாகும் வானிலை; 56 பேர் உயிரிழப்பு; 21 பேரை காணவில்லை! appeared first on Vanakkam London.