• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை அருகே மூழ்கிய இரான் கடற்படை கப்பல் – உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

Byadmin

Mar 4, 2026


இரான் கப்பல், இலங்கை

பட மூலாதாரம், Mashregh News / File Photo

படக்குறிப்பு, கோப்புப் படம்

இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.

இரானிய கப்பல் விபத்தில் சிக்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் இதனை உறுதி செய்தார்.

காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்த 140-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin