• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை இறுதிகட்ட போர்: “ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை” – சர்வதேச அமைப்புகள் கூறுவது என்ன?

Byadmin

Feb 4, 2026


இலங்கை, பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், UNHR

    • எழுதியவர், ஆர்.யசிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

“இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ராணுவம் இத்தகைய குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

“இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தில் சரணடைந்த பின்னரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய நான் பின்னர் எனது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்ட போது அந்த வேதனையில் பல தடவைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் ” என, இறுதிக்கட்ட போரின் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முன்னாள் போராளி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

By admin