• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம் | 11 Nagai fishermen injured in Sri Lankan pirates attack

Byadmin

Oct 7, 2025


நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார் நகரைச் சேர்ந்த விக்​னேஷ்(28), விமல்​(26), சுகு​மார்​(31), திரு​முரு​கன்​ (31), முரு​கன்​(38), அருண்​(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரை கிழக்கே மீன்​பிடித்து கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​கொள்​ளை​யர் 8 பேர், மீனவர்​களின் படகில் ஏறி இரும்​புக் கம்​பி, கட்​டை, கத்தி உள்​ளிட்ட ஆயுதங்​களால் மீனவர்​களைத் தாக்​கி, அவர்​களிடம் இருந்த வெள்ளி செயின், இன்​ஜின், செல்​போன், ஜிபிஎஸ் கரு​வி, வாக்கிடாக்கி ஆகிய​வற்றை பறித்​துச் சென்​றனர்.

இதே​போல, கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நம்​பி​யார் நகரைச் சேர்ந்த சசிகு​மார் ​(30), உதயசங்​கர்​(28), சிவசங்​கர்​(25), கிரு​பா(29), கமலேஷ்(19) ஆகிய 5 பேரை​யும் நேற்று முன்​தினம் இரவு தாக்​கி, இன்​ஜின், ஜிபிஎஸ், செல்​போன், 500 கிலோ வலை ஆகிய​வற்​றைப் பறித்து சென்​றனர்.

2 படகு​களிலும் மொத்​தம் ரூ.4 லட்​சம் மதிப்​பிலான பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர் கொள்​ளை​யடித்​துச் சென்​றுள்​ளனர். இதில், காயமடைந்த 10 பேர் நாகை அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். பலத்த காயமடைந்த சிவசங்​கர், தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்​து, நாகை கடலோர காவல் குழும போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்றனர். இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து நாகை நம்​பி​யார் நகர் மீனவர்​கள் தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளனர். அச்​சமின்றி மீன்​பிடி தொழில் செய்ய மத்​திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும் என மீனவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஆந்​திரா மீனவர்​கள் தாக்​குதல் காரைக்​கால் மாவட்​டம் கிளிஞ்​சல்​மேடு மீனவ கிராமத்​தைச் சேர்ந்த 24 மீனவர்​கள் 2 படகு​களில், ஆந்​திர மாநிலப் பகு​தி​ கடல் பரப்​பில் நேற்று முன்​தினம் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு வந்த ஆந்​திர மீனவர்​கள் 50-க்​கும் மேற்​பட்​டோர், காரைக்​கால் மீனவர்​களை தாக்​கி​ அவர்​களிட​மிருந்த வாக்கி டாக்​கி, வலைகள், மீன்​கள், செல்​போன்​களை​ பறி​த்து சென்றுள்​ளனர். இதில் காயமடைந்த காரைக்​கால் மீனவர்​கள் நேற்று கரை திரும்பி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.



By admin