ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 70 மீனவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமேசுவரம்,பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 70 மீனவா்களின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதா் பாட்ஷா தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.
மேலும் இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்க பிரதிநிதிகள் சாகயம், ஆல்வீன்,பிரான்சிஸ்,சம்சன்,மற்றும் தங்கச்சிமடம் திமுக நிர்வாகிகள் எஸ்தர்,ஸ்டெல்லா,மூர்த்தி,அருனாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.