இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக ஒரு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15ஆம் திகதி பதிவாகியுள்ளது, அதன்படி 10,483 சுற்றுலாப் பயணிகள் குறித்த தினத்தில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 22 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர், அதற்கமைய இந்தியாவிலிருந்து 35,177 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 19,930 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 19,893 சுற்றுலா பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில் சுமார் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை! appeared first on Vanakkam London.