• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை தேர்தல்: அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?- தமிழ் கட்சிகள் வரலாறு காணாத பின்னடைவு

Byadmin

Nov 16, 2024


இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா. அதோடு, வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தான் கருதுவதாகக் கூறுகிறார் அவர்.

By admin