• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: 2009-க்குப் பின் தமிழர்கள் வாக்களிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?

Byadmin

Nov 16, 2024


இலங்கை நாடாளுமன்ற தேர்தல், தமிழர் வாக்கு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கையில் தமிழ் தேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் வாக்கு 2009-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமிழ் தரப்பினருக்கு வழங்குவது படிப்படியாக குறைவடைந்திருந்தது.

இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பெரும்பாலான வாக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து ஏனைய தமிழர் பகுதிகளில் வாழும் மக்களும், தமது வாக்குகளை தேசிய ரீதியான கட்சியொன்றுக்கு வழங்கியுள்ளனர்.

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முடிவுகள் யாருக்கு சாதகமாக வந்துள்ளன? இறுதிக்கப்பட்ட யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள தேர்தல்களில் தமிழர்களின் வாக்களிக்கும் போக்கு எவ்வாறு மாறியுள்ளது?

By admin