இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், தேசிய ஔடத உற்பத்தி நிலையம் ஒன்றினால் இரத்து செய்யப்பட்ட சட்டவிரோத இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி கஞ்சா உற்பத்தி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
The post இலங்கை மதுவரித் திணைக்கள ஊழியர் கைது! appeared first on Vanakkam London.