• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை: ராஜபக்ஸ குடும்பம் கடந்த 87 ஆண்டுகளில் முதன் முறையாக சொந்த மண்ணில் போட்டியிடாதது ஏன்?

Byadmin

Oct 20, 2024


இலங்கை, ராஜபக்ஸ குடும்பம்

பட மூலாதாரம், SLPP MEDIA

படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அன்று முதல் இலங்கையின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களாக ராஜபக்ஸவின் குடும்பத்தினர் விளங்கிய போதிலும், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

By admin