• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை வரும் மோடி; புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திட திட்டம்!

Byadmin

Mar 16, 2025


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வியஜம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (15) உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் முதலாம் வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

மோடியின் இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே புதிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

By admin