• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: வாகனங்களிலுள்ள அலங்காரம், கடவுள் சிலை அகற்றப்படுகிறதா?

Byadmin

Jan 7, 2025


க்ளின் ஶ்ரீலங்கா திட்டம், இலங்கை செய்திகள், இலங்கை மக்கள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள கிளின் ஸ்ரீலங்கா திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக கூறி, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தேங்காய் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் தேதி கிளின் ஸ்ரீலங்கா திட்டம் தொடங்கப்பட்டது.

By admin