• Mon. Jan 27th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி – விலை 2 மடங்காக உயரும் என்ற அச்சம் ஏன்?

Byadmin

Jan 26, 2025


இலங்கை, வாகன இறக்குமதிக்கு அனுமதி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி முதல் வாகன இறக்குமதிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இப்போது புதிதாக ஆட்சி பீடம் ஏறிய அநுர குமார திஸாநாயக்க, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளார். வாகன இறக்குமதிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்ஜிகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.



By admin