179
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் அடுத்த ஆண்டு 11 வது உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்தின் இலண்டனில் 2026ம் ஆண்டு ஏப்ரல் 4ம் 5ம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த வருடம் பிரான்சில் நடைபெற்ற 10வது உலகக் கிண்ணப் பூப்பந்தாட்டப் போட்டிகளில் சுமார் 275க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தவருடம் நடைபெற உள்ள போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான புதிய ஒருங்கிணைப்புக் குழுவினையும் மற்றும் போட்டி விபரங்களையும் அறிமுகம் செய்யும் ஊடகச்சந்திப்பு இம்மாதம் இலண்டன் கரோவில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் நிறுவனர் கந்தையா சிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலண்டன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவில் தர்மரத்தினம் ரகுராஜ், திரு சுகுமார், மகேன் பாக்கியரத்தினம், அரசரத்தினம் கார்த்திக், திருமாறன் பாலா, சேனாதிராஜா தனஞ்செயன், பிலிப் கான்ஸ்டன்டைன், குருபரன் சுந்தர், கந்தையா சிங்கம், கதிர்வேல் ஜெகதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் வெளியிடப்பட்ட ஊடக செய்தி;