1
இலண்டனில் இந்தியன் அரோமா (Indian Aroma) எனும் உணவகத்துக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக BBC செய்தி வெளிட்டுள்ளது.
இம்மாதம் 22ஆம் திகதி நடந்த இந்த தீ சம்பவத்தில் ஐவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் உயிருக்குப் போராடுவதாக வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கிறது.
9 பேர் கட்டடத்திலிருந்து காயமன்றித் தப்பினர்.
உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் உணவகம் முற்றிலுமாகத் தீப்பற்றியது. தீயை அணைக்கத் தீயணைப்புப் படை சுமார் ஒன்றரை மணி நேரம் போராடியதாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும் 54 வயது ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தைக் கண்டவர்கள் தீயில் சிலரின் உடல்கள் கிட்டத்தட்ட முழுமையாகக் கருகியதாக தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ சம்பம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.