0
இலண்டன், டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நியூ ஆட்டோமோட்டிவ் (New AutoMotive) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையைத் தடை செய்ய இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அறிக்கையின் படி, தலைநகரான இலண்டனில் செயல்பட்டு வரும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எரிபொருள் விற்பனையை முற்றிலும் நிறுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள சுமார் 8,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டுக்குள் கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் தற்போது சுமார் 15.5 மில்லியன் அளவில் உள்ள டீசல் கார்கள், 2035 ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 250,000 ஆக மட்டுமே குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையைத் தொடர்ந்து, பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் சேமிப்பையும் விநியோகத்தையும் நிறுத்த முடிவு செய்யக்கூடும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.