1
இலண்டனில் பனிப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அண்மைய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (வியாழன், மார்ச் 13) காலை 6 மணி முதல் 9 மணி வரை பனிப்பொழிவால் பாதிக்கப்படலாம்.
வானிலை வரைபடத்தில், பனிப்பொழிவின் கனமானது ஊதா நிற நிழலால் குறிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 0.3 செமீ பனிப்பொழிவு இருக்கும் என்று இது கூறுகிறது.
இதேபோல், வானிலை அலுவலகத்தின் முன்னறிவிப்பு நாளை காலை வெப்பநிலை 0C ஆகக் குறையும் என்று கணித்துள்ளது.
மேகமூட்டத்துடன் கூடிய மழை மற்றம் ஆலங்கட்டி மழை அபாயத்துடன் சில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 9Cஆக கணப்படுவதுடன், இன்றிரவு மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.