• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

இலண்டன் தமிழர் சந்தை நடைபெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவு

Byadmin

Mar 19, 2025


இலண்டன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இலண்டன் தமிழர் சந்தை இந்த ஆண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் 6ம் திகதிகளில் நடைபெற உள்ளது. பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரு நாட்களாக இன்னும் மூன்று வாரங்களில் நடைபெற உள்ளது.

ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் வியூ மண்டபத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர்களுடன் வர்த்தகக் கண்காட்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டு வர்த்தகக் கண்காட்சியின் தகவல்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் தமது தொழில் முயற்சிகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். இவ்வாண்டும் பத்தாயிரம் பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுழைவுச்சீட்டுக்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள;

The post இலண்டன் தமிழர் சந்தை நடைபெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவு appeared first on Vanakkam London.

By admin