0
இளவரசர் ஹாரி, மீண்டும் இலண்டன் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். சில இங்கிலாந்து செய்தித்தாள்கள் தகவல்களைச் சேகரிக்க சட்டவிரோத முறைகளை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வழக்கு, டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளரான Associated Newspapers நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட உள்ளது. தனியுரிமை மீறல் மற்றும் சட்டவிரோத தகவல் சேகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் முன்வைக்கப்படுகின்றன.
இம்முறை இளவரசர் ஹாரியின் அணுகுமுறையில் மாற்றம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்புபோல் அனைத்தையும் கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டை விடுத்து, தனது குடும்பத்தினருடன் மீண்டும் நல்லுறவை உருவாக்குவது குறித்தும் அவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட Stephen Lawrence-இன் தாயார் Baroness Lawrence, பிரபல பாடகர் Elton John, நடிகை Liz Hurley ஆகியோரும் இளவரசர் ஹாரியுடன் சேர்ந்து, இந்த வழக்கில் சாட்சிகளாக ஆஜராக உள்ளனர்.
இது செய்தித்தாள் நிறுவனங்கள் சட்டவிரோத முறையில் செயல்பட்டதாகக் கூறி இளவரசர் ஹாரி தொடரும் மூன்றாவது முக்கிய நீதிமன்ற வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.