0
இங்கிலாந்து – கேம்பிரிஜ்ஷாயர் (Cambridgeshire) பகுதியில் ரயிலில் நேர்ந்த கத்திக்குத்துத் தாக்குதல் பயங்கரவாதச் சம்பவம் அல்ல என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞன். இன்னொருவர் கரீபியன் வம்சாவளி கொண்ட 35 வயது இளைஞன் ஆவார்.
குறித்த இருவரும் சனிக்கிழமையன்று இலண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது.
அதில் 10 பேர் காயமுற்றனர். அவர்களில் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இவர்களில் கரீபியன் இளைஞன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இங்கிலாந்து இளைஞன் மீது மட்டுமே சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அவர்கள் விசாரணையைத் தொடர்கின்றனர்.
சந்தேகநபர், இலண்டன் நோக்கிச் செல்லும் ரயிலில் பீட்டர்பரோ (Peterborough)வட்டாரத்தில் ஏறினார். அது லண்டனிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அப்போது சந்தேகநபர் 11 பேரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.