• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

இல. கணேசன்: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு முகம் தந்தவரின் பின்னணியும் முக்கிய செயல்பாடுகளும் என்ன?

Byadmin

Aug 16, 2025


இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், X/ Temjen Imna Along

படக்குறிப்பு, 1945ஆம் ஆண்டு தஞ்சாவூரில் லக்ஷ்மி ராகவ ஐயர் – அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார்.

நாகாலாந்து மாநில ஆளுநரும் தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80. நீரிழிவு நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்த அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மயங்கி கீழே விழுந்தார்.

ஆகஸ்ட் எட்டாம் தேதி உடல்நிலை மோசமான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

இல.கணேசனின் பின்னணி

இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இல. கணேசன், பாஜகவை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல பாடுபட்டவர்.

நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்துவந்த இல. கணேசன், தமிழ்நாடு பா.ஜ.கவில் செயல்பட்ட காலத்தில், கட்சியை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல பாடுபட்டவர்.

இல. கணேசன் 1945ஆம் ஆண்டு தஞ்சாவூரில் லக்ஷ்மி ராகவ ஐயர் – அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வருவாய்த் துறையில் ஆய்வாளர் பணி கிடைத்தது. அதில் சில ஆண்டுகள் பணியாற்றியவர், ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழு நேரத் தொண்டரானார்.

By admin