அடுக்கு செம்பருத்தி மலர்களைக் காயவைத்துப் பொடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு நாள் வைத்து, தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.
கருவேப்பிலை, நெல்லிக்காய், பாகற்காய், பீட்ரூட், சுண்டைக்காய், கீரைகளைச் சாப்பிட்டு வர தலைமுடி நரைக்காமல் இருக்கும்.
நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு சேர்த்து அரைத்துத் தலையில் தடவி ஊறவைத்து குளித்தால், இளநரை மறையும்.
நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்குத் தடவி அரை மணி நேரம் கழித்து, அலசவும். நாளடைவில் இளநரை மறையும்.
ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
The post இளநரை நீங்க.. appeared first on Vanakkam London.