• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க சில வழிகள்

Byadmin

Oct 15, 2024


இளமை
இன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

அதிலும் தற்போது பெரும்பாலானோர் ஜங்க் உணவுகளை அதிகம் எடுத்து வருவதால், உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதுடன், சருமத்தின் அழகையும் பாதிக்கிறது.

இதில் முக்கியமாக ஆண்கள் தான் விரைவில் முதுமையானவர்கள் போன்று காணப்படுகின்றனர். இதற்கு அவர்கள் தங்களின் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்காதது தான் காரணம்.

அக்காலத்தில் எல்லாம் ஆண்கள் தங்கள் சருமத்திற்கு எவ்வித பராமரிப்புக்களும் கொடுக்காமலேயே அழகாகவும் இளமையுடனும் காட்சியளித்தனர். ஆனால் இன்றைய மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் ஆண்கள் தவறாமல் தங்களின் சருமத்தைப் பராமரித்தால் தான் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க முடியும்.

ஆரஞ்சு ஸ்கரப்
ஆரஞ்சு ஜூஸில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து, பின் அதனை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் சி சத்தானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். அதிலும் இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வர வேண்டும்.

தக்காளி
உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வருவதுடன், அதன் சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்களை வழங்கி, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமமானது இளமையுடன் காட்சியளிக்கும்.

தேன் ஃபேஷியல்
வறட்சியுடனும், மென்மையிழந்து இருந்து சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும். Show Thumbnail

ஃபுரூட் ஃபேஷியல்
பாதி ஆப்பிளை நறுக்கி, அத்துடன் 5 ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முதுமை கோடுகள் மறைந்து, முகம் சுத்தமாக அழகாக காணப்படும்.

By admin