0
புதுமுக நடிகர் அஜிதேஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்த 7 நாட்கள்’ எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எம். சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அந்த 7 நாட்கள் ‘ திரைப்படத்தில் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, நமோ நாராயணன், கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
அபூர்வ ஆற்றல் கொண்ட தொலைநோக்கி ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கண்டதும் காதலிக்கும் காதலனின் வாழ்வில் தொலைநோக்கி ஒன்று கிடைக்கிறது.
அதனால் அவனுடைய வாழ்க்கை தடம் மாறுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன? என்பதை தான் இந்த டீசரில் இயக்குநர் விவரித்திருப்பதால் படத்தைப் பற்றிய ஆர்வம் அதிகரித்திருக்கிறது.