• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள் என்ன? 8 கேள்வி-பதில்கள்

Byadmin

Sep 7, 2026


இளைஞர்களிடையேயும் மாரடைப்பு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன (சித்தரிப்புப் படம்).

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளைஞர்களிடையேயும் மாரடைப்பு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன (சித்தரிப்புப் படம்).

    • எழுதியவர், பிரியங்கா திமான்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

முன்பெல்லாம் மாரடைப்பு என்று கேள்விப்பட்டவுடன், வயதான ஒருவரின் உருவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இன்றோ இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் ஒருவர் வெளித்தோற்றத்தில் மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் தோன்றலாம். ஆனால், அவரும் இதய நோயுடன் போராடிக் கொண்டிருக்கலாம்.

இளம் வயதினரிடையே மாரடைப்பு பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்த முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக, டெல்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் இதயவியல் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் இதயநோய் நிபுணர் மருத்துவர் கேவல் கிஷன் தல்வாரிடம் பேசினோம்.

அவர் எய்ம்ஸில் இதயவியல் துறைத் தலைவராகவும், சண்டிகரில் உள்ள பிஜிஐ-யின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மருத்துவர் தல்வார் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

By admin