இளவரசி டயானாவின் உறவினரான ஒருவர் மீது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளவரசி டயானாவின் உறவினரும், Marlborough கோமகனுமான ஜேமி ப்ளாண்ட்ஃபோர்ட் (Jamie Blandford) என்பவரே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில், ஒரே நபரை மூன்று வேறு வேறு சந்தர்ப்பங்களில் கழுத்தை நெறித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சட்டப்படி அவருக்கு எதிராக தற்போது உத்தியோகபூர்வமாக குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜேமி ப்ளாண்ட்ஃபோர்ட் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் சகோதர உறவுமுறை கொண்டவர் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
The post இளவரசி டயானாவின் உறவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு appeared first on Vanakkam London.