• Tue. Feb 17th, 2026

24×7 Live News

Apdin News

இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பது ஏன்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Byadmin

Feb 17, 2026


குடல் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவின் பதின்ம வயதினருக்கான ‘டாசன்ஸ் கிரீக்’ (Dawson’s Creek) தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக், குடல் புற்றுநோயால் தனது 48 வயதில் காலமானார்.

“நமது அன்பிற்குரிய ஜேம்ஸ் டேவிட் வான் டெர் பீக் இன்று காலை காலமானார்” என்று அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

“அவர் தனது இறுதி நாட்களை தைரியம், நம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் எதிர்கொண்டார்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடல் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடல் புற்றுநோயால் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் தனது 48 வயதில் காலமானார்.

2023-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நவம்பர் 2024-இல் அவர் இந்தச் செய்தியைப் வெளிப்படுத்தினார்.

‘பிசினஸ் இன்சைடர்’ இதழுக்கு அளித்த பேட்டியில், தனது குடல் இயக்கங்களில் மாற்றங்களை முதன்முதலில் கவனித்ததாக அவர் கூறினார். இது குடல் புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர் ஆரம்பத்தில் காபி குடிப்பதை நிறுத்தினார்.

By admin