• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள்

Byadmin

Oct 30, 2026


கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம்

படக்குறிப்பு, கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இளையராஜாவின் இசையில் ‘கிதார்’ இசைக்கருவிக்கு ஒரு பிரத்யேக இடம் இருக்கும்.

‘என் இனிய பொன் நிலாவே’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘கோடை கால காற்றே’ என பல பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இளையராஜாவின் பல திரைப்படப் பாடல்களை மெருகூட்டிய அந்த கிதார் இசைக்குப் பின் இருந்தவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1947, செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 29) தனது 79வது வயதில் காலமானார்.

1966இல் வெளியான ‘யாருக்காக அழுதான்’ என்ற திரைப்படத்தில் முதன்முதலில் கிதார் கலைஞராக பணியாற்றிய சதானந்தம், தனது 60 வருட திரையிசைப் பயணத்தில், 45 வருடங்களுக்கும் மேலாக இளையராஜாவின் குழுவில் பணியாற்றியுள்ளார்.



By admin