0
13 வயது முதல் 17 வயது வரையிலான இளையர்களின் தகவல்களை TikTok பயன்படுத்துவது தொடர்பில் இங்கிலாந்து அராய்ந்து வருகிறது.
அதன்படி, TikTok மற்றும் Reddit போன்ற செயலிகள் பிள்ளைகளின் தனிப்பட்ட விவரங்களை எப்படிப் பாதுகாக்கின்றன என்பது குறித்து இங்கிலாந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து தகவல் ஆணையர் அலுவலகம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் பயனீட்டாளரை ஈர்க்கும் வகையில் அவர்கள் விரும்பும் விவரங்களைத் தருகின்றன. எனினும், ஒருவர் எதை விரும்புகிறார் என்பது நிறுவனத்துக்கு எப்படித் தெரியும்?
சீனாவின் ByteDance நிறுவனத்துக்குச் சொந்தமான TikTok செயலி, 13 முதல் 17 வயது வரையிலான இளையர்களின் விவரங்களை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையே இங்கிலாந்தின் தகவல் ஆணையர் அலுவலகம் புலனாய்ந்து வருகிறது.
மேற்படி சமூக ஊடக நிறுவனங்கள் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை மீறியது தெரியவந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து தகவல் ஆணையர் அலுவலகம் கூறியுள்ளது.