• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

இவர் போலொரு | நதுநசி

Byadmin

Nov 26, 2025


சிந்தனை வழி
சிறகடித்து வாழ்ந்த
ஒரு தலைவர் அவர்.
பிரபா கரன்.

விருப்பு வெறுப்பு
எல்லாம் தமிழர்
நல்வாழ்வை எண்ணி
நோக்கி நடந்தது.

படை பெருக்கி
நாட்டை ஆக்கி
நின்று நிலைத்திட
வேண்டியது தேடினார்.

தேடுவது எல்லாம்
தேவையானது மட்டுமே!
முப்படைகளின் தலைவன்
படைத்துவிட்ட கடவுள்.

உலகம் திரும்பி
பார்த்துக் கொண்டதே
பெரு வியப்பொன்று.
எப்படி இது இப்படியானதோ?

நுணுக்கமான நகர்வு;
அறிவியல் மேம்பாடு;
அதி புத்திக்கூர்மை என,
எல்லாம் காணலாம் அவரிடம்.

சிறகடித்து பறந்தது
அவரின் ஆழ்மனது.
சிந்தனைக்கு செயல்வடிவம்
கொடுத்திட வாழ்ந்தார்.

இவர் போலொரு
தலைவர் இல்லை
இவரை விடுத்து இங்கே!
வாழ்த்துவோம் தலைவரை.

நதுநசி

The post இவர் போலொரு | நதுநசி appeared first on Vanakkam London.

By admin