2
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதான ஒரு முக்கிய கொள்கை மாற்றத்தை இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இதே முடிவை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் ஆதரித்து முன்னதாக அறிவித்தன.
இந்த அங்கீகாரமானது, “சமாதானம் மற்றும் இரு-அரசு தீர்வுக்கான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்க” இங்கிலாந்து விரும்புவதைக் காட்டுகிறது.
தொடர்புடைய செய்தி : பாலஸ்தீனம் தனி நாடு என்று அதிகாரபூர்வமாக இங்கிலாந்து அங்கீகரித்தது
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், இந்த அங்கீகாரத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்குக் கரையின் பகுதிகளை இணைக்கக் கூடாது என்று வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தான் இதைத் தெளிவுபடுத்தியதாகவும், அவர்களும் அவர்களின் அரசாங்கமும் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் யெவெட் கூப்பர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவானது, பாலஸ்தீனியர்களுக்கான பாதுகாப்பை மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பாதுகாப்பையும் மதிப்பதற்கான சிறந்த வழி என்றும் கூப்பர் கூறினார்.
மேலும், இது மத்திய கிழக்கில் அமைதி, நீதி மற்றும் பாதுகாப்பு ஆகியவை தொடர்பானது என்றும் அவர் கூறினார். அழிவையும் துன்பத்தையும் கண்ட பிறகு, இதில் இருந்து ஒதுங்கிச் செல்வது தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் இஸ்ரேல் அரசை அங்கீகரித்ததைப் போலவே, பாலஸ்தீனியர்களுக்கும் சொந்தமாக ஒரு நாட்டிற்கான உரிமையை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்” என்றும் கூப்பர் கூறினார்.