இஸ்ரேலில் பரவிய காட்டுத்தீ – புகைமூட்டமாக காணப்படும் ஜெருசலேம்
புதன்கிழமை (ஏப்ரல் 30) இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியது. இதனால் நெடுஞ்சாலைப் பகுதி கடுமையான புகை மூட்டத்துடன் காணப்பட்டதால், ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களைச் சாலையிலே விட்டுச் சென்றனர்.