• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் கெடு – எதற்காக? மீறினால் என்ன ஆகும்?

Byadmin

Oct 16, 2024


இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண்

காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது.

தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுபப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்துபூர்வ எச்சரிக்கையாக உள்ளது. வடக்கு காஸாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களால் குடிமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா இக்கடிதத்தை எழுதியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையேயான சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை கடந்த மாதம் இஸ்ரேல் மறுத்தது அல்லது தடுத்ததாகவும், காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவதாகவும் ஆழ்ந்த கவலைகளை அக்கடிதத்தில் அமெரிக்கா எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் கடிதத்தை மதிப்பாய்வு செய்து வருவதாக, இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தை இஸ்ரேல் தீவிரமாக எடுத்துள்ளதாகவும்”, அமெரிக்கா “எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் கொள்வதாகவும்,” அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

By admin