• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி – டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

Byadmin

Feb 25, 2026


பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்

பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் (பிப்ரவரி 25-26 ) இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்ததாகத் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோதி, “இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு குறித்த விஷயத்தில் நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். நம்பிக்கை, புத்தாக்கம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஒரே மாதிரியான அர்ப்பணிப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலுடனான உறுதியான நட்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது,” என்று கூறினார்.

ஃபோர்ப்ஸ் இந்தியா செய்தியின்படி, 2026-ஆம் ஆண்டில் இந்தியா இஸ்ரேலுடன் 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறது. இதில், ஸ்பைஸ்-1000 துல்லியமாக வழிநடத்தப்படும் குண்டுகள், ராம்பேஜ் (Rampage) வானிலிருந்து தரையை குறிவைக்கும் ஏவுகணை, வான்வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஐஸ் பிரேக்கர் ஏவுகணை அமைப்பு ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவும், பிரதமர் மோதியின் பயணத்தின் போது இஸ்ரேலுடன் பல முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறுகிறார், இதில் நவீன டிரோன்களும் அடங்கும்.

By admin