• Wed. Sep 17th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேலுக்கு பல் முனை உலக அழுத்தம் – தென் ஆப்ரிக்கா நிலைக்கு தள்ளப்படுமா?

Byadmin

Sep 17, 2025


பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்.

காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.

இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட ‘தென்னாப்பிரிக்கா’ காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன.

அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்படுத்தாமல், இந்த ராஜ்ஜிய சிக்கலை சமாளித்து, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது இலக்குகளைத் தொடர முடியுமா?

முன்னாள் பிரதமர்களான எகுட் பராக் மற்றும் எகுட் ஓல்மெர்ட் ஆகியோர், நெதன்யாகு இஸ்ரேலை உலகளவில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாற்றி வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளனர்.

By admin