• Sat. Jun 21st, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேலுடன் இணைந்தால் அமெரிக்காவை இரான் தாக்குமா? முக்கிய சந்தேகங்களும் பதில்களும்

Byadmin

Jun 20, 2025


இரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூன் 13ஆம் தேதியன்று இரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது

இஸ்ரேலும் இரானும் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்கா அந்த மோதலில் இணையுமா எனக் கேட்டபோது, “நான் அதைச் செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18ஆம் தேதி பதிலளித்தார்.

பிபிசியின் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு, பிபிசியின் நிபுணர்களும் செய்தியாளர்களும் அளித்த பதில்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இப்போது இஸ்ரேல் ஏன் இரான் மீது தாக்குதல் நடத்துகிறது ?

இஸ்ரேலின் நிலைப்பாடு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்திவிட்டதாக இஸ்ரேல் நம்புகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி முடங்கிவிட்டதால், இதுதான் ஒரே வழி என்று இஸ்ரேல் கருதுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரானால் தனது இருப்புக்கே அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஏனெனில், இரான் கடந்த காலங்களில் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தது. அதனால், தனது கைக்கு அணு ஆயுதம் கிடைத்தால் இரான் அதைத் தன் மீது பயன்படுத்தும் என்று இஸ்ரேல் எண்ணுகிறது.

By admin