• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான்: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் மத்திய கிழக்கில் மோதலை தடுக்க முடியாதது ஏன்?

Byadmin

Oct 28, 2024


இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்)

அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி பேசி வருகின்றனர்.

இந்த பிரச்னைகளுக்கு மத்தியில், உலகின் மூன்று பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மோதல்களுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்?

இஸ்ரேல் - இரான்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஸா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இந்த பதற்றம் இரான் வரை பரவிவிட்டது.

By admin