• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான்: காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் – இரானுக்கு பதிலடி எப்போது?

Byadmin

Oct 7, 2024


இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலுக்கு இலக்கான இடம்.

இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதன் ஓராண்டு நிறைவு நாளில், காஸா, லெபனான் ஆகிய இரு பிரதேசங்களிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இஸ்ரேலை நோக்கி ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

அதேவேளையில், ஹமாஸிடம் இன்னும் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான ஒப்ந்தத்தை இறுதி செய்யுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. பணயக்கைதிகளின் உறவினர்கள் பிரதமர் இல்லத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஹமாஸிடம் இருந்து எதிர்பாராத தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல், இந்தாண்டு அதேநாளில் என்ன செய்கிறது? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல் - இரான்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்

லெபனானின் சில பகுதிகளில் இன்று(அக்டோபர் 7) காலை பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

By admin