• Mon. Jun 23rd, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் இரான் நட்புறவு 1979க்கு பிறகு பகைமையாக மாறியது எப்படி? முழு வரலாறு

Byadmin

Jun 22, 2025


இஸ்ரேல் - இரான் மோதல், அயதுல்லா அலி காமனேயி, பெஞ்சமின் நெதன்யாகு, பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டபோது, துருக்கியை தொடர்ந்து இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டாவது இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இரான் இருந்தது.

அந்த நேரத்தில், இஸ்ரேலும் இரானும் நட்புறவு பாராட்டி வந்தாலும், பின்னர் சூழ்நிலை முற்றிலும் மாறி, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரிகளாக மாறின.

கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் மீண்டும் இரானை தாக்கியது. டெஹ்ரான், நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட இரானின் பல ராணுவ மற்றும் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய நகரங்கள் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது.

By admin