• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான் போர் மூண்டால் இந்தியாவில் சாமானியருக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Oct 7, 2024


இரான் உச்ச தலைவர் அயதுல்லா காமனெயி (இடது), இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் அயதுல்லா காமனெயி (இடது), இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

  • எழுதியவர், அபிநவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

அக்டோபர் 1ஆம் தேதியன்று இரான் இஸ்ரேல் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இஸ்ரேலை இரான் நேரடியாகத் தாக்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இருவருடைய இறப்புக்குப் பின் இரானால் நடத்தப்பட்ட முக்கியமான தாக்குதல் இது.

இரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் இத்தாக்குதலில் பாலத்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பகைமையின் இந்தப் புதிய கட்டம், விரைவில் முடிவுறும் எனத் தோன்றவில்லை.

By admin