• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 180 ஏவுகணைகள் ஜோர்தான் வான்பரப்பில் இடைமறிப்பு!

Byadmin

Oct 2, 2024


இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் அவ் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு, தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மொத்தம் 180 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அவற்றில் பெரும்பகுதி இடைமறிக்கப்பட்டுவிட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

யாருக்கும் பெரிய காயம் இல்லை என்றும், இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் பெரிய தவறு செய்துவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்தார்.

அதற்கு ஈரான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா, இஸ்ரேலை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த தகவல்படி, ஈரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பைடன் குறிப்பிட்டார்.

The post இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 180 ஏவுகணைகள் ஜோர்தான் வான்பரப்பில் இடைமறிப்பு! appeared first on Vanakkam London.

By admin