• Tue. Oct 1st, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது – ஹெஸ்பொலா என்ன செய்யப் போகிறது?

Byadmin

Oct 1, 2024


இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலில் கவச வாகனத்துடன் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF- ஐடிஎப்) எக்ஸ் தளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைப்போம். இந்த இராணுவ நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.”

“இங்கிருந்து தான், வடக்கு இஸ்ரேலின் எல்லையில் வசிக்கும் மக்களை ஹெஸ்பொலா தாக்குகிறது. இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் பகுதியாகும். இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் ஐடிஎப் வீரர்கள்

‘வான், கடல் மற்றும் நிலம் வழியாக தாக்குதல்’

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேலன்ட், செப்டம்பர் 30 அன்று லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்களை சந்தித்தார்.

By admin